Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சட்டமன்ற தேர்தல்- வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பணியாளர்களின் இரண்டாம் கட்ட ரேண்டமைசேஷன் (2nd Randomization) கடந்த 10.04.2026 அன்று நிறைவு பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து இன்று (19.04.2026) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அதிகாரிகள் மற்றும்

பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட மறுபயிற்சி நடைபெற்றது. மணப்பாறை (138), ஸ்ரீரங்கம் (139), திருச்சி மேற்கு (140), திருச்சி கிழக்கு (141), திருவெறும்பூர் (142), லால்குடி (143), மணச்சநல்லூர் (144), முசிறி (145) மற்றும் துறையூர் (146) ஆகிய தொகுதிகளில் இந்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை, வாக்குச்சாவடி நடைமுறைகள், தேர்தல் நாளில் பயன்படுத்தப்படும் படிவங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மொபைல் செயலி பயன்பாடு குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி மையங்களில் அடிப்படை வசதிகள், உரிய காவல் பாதுகாப்பு, மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள்

செய்யப்பட்டிருந்தன. மேலும், அமைக்கப்பட்ட அஞ்சல் வாக்கு மையங்களில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த பயிற்சிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *