Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஏய் வெளியே போ என தரக்குறைவாக பேசிய துணை ஆணையர் – நிகழாத சம்பவத்திற்கு கடுமையாக DC நடந்து கொண்டதால் பத்திரிக்கையாளர்கள் கோபம்

 

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்தில் இரண்டு மையங்களில் பாதுகாப்பாக வைத்து சிலீடும் பணி இன்று காலை நடைபெற்றது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தேர்தல் பார்வையாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம் ,திருவரம்பூர்,மணப்பாறை உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகள் பதிவான வாக்குகளை வகுப்பது இயந்திரங்கள் பாதுகாப்பாக ஸ்டாங் ரூமில் வைத்து சீலிடப்பட்டது. அப்பொழுது பிரபலமான நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் சீலிட்ட ஸ்டாங் ரூமை விதிகளுக்கு உட்பட்டு நின்று புகைப்படம் எடுக்க முற்பட்ட பொழுது திடீரென ஒரு பெண் குரல் எழுப்பி வேகமாக ஓடிச் சென்றார். பத்திரிக்கையாளர்கள் அதிகாரிகளும் பதற்றம் அடைந்து எதற்கு வேகமாக ஓடுகிறார் என்று பின்தொடர்ந்த போது அந்த புகைப்படக் கலைஞரை தரக்குறைவாக ஏய் நீ வெளியில போ நீ எப்படி உள்ளே சென்றாய் என பேசினார்.

பத்திரிகையாளர் அனைவரும் சென்று அவரிடம் முறையிட்ட பொழுது தொடர்ந்து அவ மரியாதையாக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வந்தார். இதனை கடும் கண்டனம் தெரிவித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி வந்து பத்திரிகையாளர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். சிசிடிவி காட்சிகளை காண்பியுங்கள் நாங்கள் செல்லவில்லை என தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேட்ட பிறகு காவல்துறையால் சிசிடிவி காண்பிக்க முடியாமல் நகர்ந்து சென்றுவிட்டனர் . சிசிடிவி தற்போது செயல்பட துவங்கவில்லை அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினர் என இவர்கள் பாதுகாப்பில் இருக்கும் பொழுது எப்படி உள்ளே செல்வார்கள் மொழி தெரியாது என்று சொல்லும் காவல்துறையினர் நீ இப்போ வெளியே போ என்ற வார்த்தைகள் எப்படி அவருக்கு தெரிகிறது. தரக்குறைவாக பேச தெரிகிறது என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக்கிற்க்கு பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர். உடனடியாக அந்த பெண் துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *