2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று (28.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 09 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தேர்தல் பிரிவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் அஞ்சல் வாக்குகளுக்கான வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை

நுண்பார்வையாளர்களுக்கான சமவாய்ப்புக்குட்படுத்தும் (Randomization) நடைமுறை நடைபெற்றது.
சட்டமன்ற தொகுதிவாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணும் அலுவலர்களின் விபரங்களின்படி, மணப்பாறை (138), ஸ்ரீரங்கம் (139), திருச்சிராப்பள்ளி மேற்கு (140), திருச்சிராப்பள்ளி கிழக்கு (141), திருவெறும்பூர் (142), இலால்குடி (143), மண்ணச்சநல்லூர் (144), முசிறி (145), மற்றும் துறையூர்-தனி (146) ஆகிய ஒன்பது தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 நுண்பார்வையாளர்கள், 17 மேற்பார்வையாளர்கள் மற்றும் 17 உதவியாளர்கள் என மொத்தம் ஒன்பது தொகுதிகளுக்கும் சேர்த்து 126 மேஜைகள், 153 நுண்பார்வையாளர்கள், 153 மேற்பார்வையாளர்கள் மற்றும் 153 உதவியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
அஞ்சல் வாக்கு எண்ணும் அலுவலர்களின் விபரப்படி, மணப்பாறை தொகுதிக்கு 4 மேஜைகள், 5 நுண்பார்வையாளர்கள், 5 மேற்பார்வையாளர்கள் மற்றும் 10 உதவியாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 6 மேஜைகள், 7 நுண்பார்வையாளர்கள், 7 மேற்பார்வையாளர்கள் மற்றும் 14

உதவியாளர்களும், மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு 5 மேஜைகள், 6 நுண்பார்வையாளர்கள், 6 மேற்பார்வையாளர்கள் மற்றும் 12 உதவியாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருவெறும்பூர், இலால்குடி, முசிறி மற்றும் துறையூர் (தனி) ஆகிய தொகுதிகள் ஒவ்வொன்றிற்கும் தலா 4 மேஜைகள், 5 நுண்பார்வையாளர்கள், 5 மேற்பார்வையாளர்கள் மற்றும் 10 உதவியாளர்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக அஞ்சல் வாக்கு எண்ணுவதற்கு 39 மேஜைகள், 48 நுண்பார்வையாளர்கள், 48 மேற்பார்வையாளர்கள் மற்றும் 96 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்டுள்ளவாறு கணினி வழியில் சமவாய்ப்புக்குட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அஞ்சல் வாக்குகளுக்கான வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நுண்பார்வையாளர்களுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதனை

தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அஞ்சல் வாக்குகளுக்கான வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.பாலாஜி அவர்கள் ஆகியோரால் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த அலுவலர்கள் இரண்டாவது சமவாய்ப்புக்குட்படுத்தப்பட்டு வாக்கு எண்ணும் நாளன்று அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரிய உள்ளனர். இந்த செய்தி வெளியீட்டை திருச்சிராப்பள்ளி செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments