Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பாட்டியைக் கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்காட்டுப்பட்டி, காரைமேடு பகுதியைச்சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான முரளிராஜா 43/24 (HS.No.03/24), த.பெ. பத்மநாபன் என்பவர் கடந்த 2016 ம் ஆண்டு பணப் பிரச்சினை காரணமாக அவரது தந்தையை கொலை செய்தார். ஆனால் முறையான ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், மேற்படி முரளிராஜா என்பவர் அவரது பாட்டியான நாகலட்சுமி 94/24, க.பெ.ராஜகோபால் என்பவரிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு சண்டையிட்டு வந்துள்ளார்.

அதன்படி, மீண்டும் கடந்த 29.09.2024 -ம் தேதி முரளிராஜா நாகலெட்சுமியிடம் பணம் கேட்டதாகவும், அதற்கு நாகலெட்சுமி பணம் இல்லை என்று கூறியதால் முரளிராஜா நாகலெட்சுமியிடம் பிரச்சனை செய்தும், அவரை அறையில் கட்டிவைத்து இரும்பு ரெஞ்ச் ஸ்பேனரால் நாகலெட்சுமியை தலையில் தாக்கி கொலை செய்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக மேற்படி முரளிராஜாவின் தாயார் பானுமதி 70/24, க.பெ.பத்மநாபன், காரைமேடு, செங்காட்டுப்பட்டி, துறையூர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் காவல் நிலைய குற்ற எண். 261/24, ச.பி. 296(b), 127(2), 103(1) BNS -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு. சவரிமுத்து ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (30.04.2026) திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு. கிறிஸ்டோபர் அவர்கள் எதிரி முரளிராஜா 43/24, த.பெ. பத்மநாபன் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த துறையூர் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமைக் காவலர் திருமதி. எழிலரசி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *