Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சிராப்பள்ளி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் வழிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 ஆனது கடந்த 23.04.2026 அன்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 138-மணப்பாறை, 139-ஸ்ரீரங்கம், 140-திருச்சிராப்பள்ளி (மேற்கு), 141-திருச்சிராப்பள்ளி (கிழக்கு) மற்றும் 142-திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. 143-இலால்குடி, 144-மண்ணச்சநல்லூர், 145-முசிறி மற்றும் 146-துறையூர் (தனி) ஆகிய தொகுதிகளின் வாக்குகள் முசிறி

 

புலிவலத்தில் உள்ள ஓயாசிஸ் தொழில்நுட்ப கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 21,47,051 ஆகும். இதில் மின்னணு இயந்திரங்கள் மூலம் 18,33,953 வாக்குகளும், அஞ்சல் வழியாக (85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட) 25,063 வாக்குகளும் பதிவாகியுள்ளன. மாவட்டத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 86.58% ஆக பதிவாகியுள்ளது. சேவை வாக்காளர்களின் அஞ்சல் வாக்குகள் வரும் 04.05.2026 அன்று காலை 08.00 மணி வரை பெறப்படும்.
வாக்கு எண்ணும் பணியைக் கண்காணிக்க 09 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் மொத்தம் 09 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம்

நியமித்துள்ளது. பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்கள், அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, QR code முறையிலான அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்று காலை 8.00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணுவதுடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பு ரகசியம் காப்பது தொடர்பான உறுதிமொழி எடுக்கப்பட்டு, ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் தேர்தல் ஆணையத்தின் ENCORE இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம்

செய்யப்படும். தபால் வாக்குகள் 500 வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் எண்ணப்படும். EVM இயந்திரங்களின் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்றின் போதுதான் அஞ்சல் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பிறகு மீதமுள்ள இயந்திர வாக்குகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு தொகுதியிலும் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து வாக்குச்சாவடிகளுக்கான VVPAT சீட்டுகள் எண்ணப்பட்டு, EVM வாக்கு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். பாதுகாப்பு மற்றும் வசதிக்காக 288 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் இணைய நிகழ் நேரலை (Web Casting) மூலம் கண்காணிக்கப்படும். மையங்களில் தீயணைப்பு, மருத்துவக் குழு மற்றும் தடையற்ற மின்சார வசதிகள்

செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் முகவர்கள் வரும்போது படிவம் 17C, பேனா மற்றும் நோட்புக் கொண்டு வர அனுமதிக்கப்படுவர்; ஆனால் கைப்பேசி உள்ளிட்ட எந்தவொரு மின்னணு கருவிகளுக்கும் அனுமதி இல்லை. விதிகளை மீறி மின்னணு கருவிகளைப் பயன்படுத்துவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 128 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முகவர்கள் தேர்தல் அடையாளங்களை வெளிப்படுத்தும் பொருட்கள் அல்லது சால்வை அணிவதைத் தவிர்க்கவும், மையத்தினுள் புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்

 

அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாகனங்கள் நிறுத்துமிடங்களைப் பொறுத்தவரை, ஜமால் முகமது கல்லூரிக்கு வருவோர் ஆயுதப்படை மைதானம் மற்றும் அண்ணா விளையாட்டு மைதானத்தையும், ஓயாசிஸ் கல்லூரிக்கு வருவோர் கல்லூரி வளாகம் மற்றும் அதற்கு வெளியே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களையும் பயன்படுத்த வேண்டும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *