திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் காமராஜ் (39) . இவர் ஒரு வருடத்திற்கு முன்பு மத்திய பிரதேசத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவரும் காமராஜ் மனைவி கார்குழலி (38)அவரது மகன்கள் தமிழ் வேந்தன் (05) புவிந்திரன் (10) மற்றும் காமராஜின் உறவினர் திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்த மைத்துனர் மனைவி சௌபாக்கியம் அவரது இரு குழந்தைகள் என ஏழு பேர் உட்பட 40 பேர் மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணைப்பகுதியில் படகில் சுற்றுலா சவாரி சென்று உள்ளனர்.இந்த நிலையில் எதிர்பாராத விதமாக படகு கவிந்ததில் சிலர் உயிழந்தனர்.

இதில் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த காமராஜ் அவரது மனைவி கார்குழலி அவரது இளைய மகன் தமிழ் வேந்தன் மற்றும் மைத்துனரின் மனைவி சௌபாக்கியம், மற்றும் மைத்துனரின் மகன் மயூரான் ஆகிய ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதில் காமராஜ் மூத்த மகன் புவிந்தரன் மற்றும் சௌபாக்கியத்தின் மகள் இனியா ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.இதனிடையே காமராஜின் மனைவி கார்குழலி, மைத்துனரின் மனைவி சௌபாக்கியம் ஆகிய இருவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.மேலும் நீரில் மூழ்கி மாயமான காமராஜ், தமிழ்வேந்தன், மயூரன் ஆகிய மூவரின் உடலை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இறந்தவர்களின் உடலை சொந்த ஊரான திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதிக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜின் தந்தை மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து காமராஜின் தந்தை கூறுகையில்,படகு விபத்தில் உயிரிழந்த மகன் காமராஜ், மருமகள் கார்குழலி,பேரன் தமிழ்வேந்தன் ஆகியோர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மத்திய பிரதேசத்தில் உள்ள அதிகாரிகள் விமான மூலம் திருச்சிக்கு கொண்டு வருவதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை என்றும், சென்னை வரை மட்டுமே கொண்டுவர அனுமதி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் உடலை திருச்சிக்கு கொண்டு வருவதற்கு காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது .
அதனால் அதிகாரிகள் இறந்தவர்களின் உடலை திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments