திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து,

138 மணப்பாறை,
139 ஸ்ரீரங்கம்,
140 திருச்சிராப்பள்ளி மேற்கு,
141 திருச்சிராப்பள்ளி கிழக்கு,
142 திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது வாக்கு எண்ணும் மையத்திலும்,

143 இலால்குடி,
144 மண்ணச்சநல்லூர்,
145 முசிறி,
146 துறையூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் புலிவலம் ஒயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பாக வைப்பறையில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் காவல் துறை பாதுகாப்புடனும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையம் மற்றும் புலிவலம் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வருகின்ற 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற உள்ளது ஆகவே இந்த இரண்டு வாக்கு எண்ணும் மைய வளாகம் முழுவதும் பாதுகாப்பு நலன் கருதி ட்ரோன் கேமராக்கள் மற்றும் எந்தவொரு ஆளில்லாத பறக்கும் எந்திரங்களும் இன்று (02.05.2026) முதல் (04.05.2026) வரை பறக்கதடை விதிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments