சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்று திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெற உள்ளதால் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வரும் பயணிகள் பேருந்துகள் தவிர்த்து, புதுக்கோட்டை நோக்கி செல்லும் மற்ற வாகனங்கள் அனைத்தும் பஞ்சப்பூர் புறவழிச்சாலை வழியாக செல்லவேண்டும்.
புதுக்கோட்டையிலிருந்து வரும் மற்ற வாகனங்கள் கும்பக்குடி சந்திப்பு. பஞ்சப்பூர் வழியாக செல்லவேண்டும்.பயணிகள் பேருந்துகள் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் TVS டோல்கேட் வழியாக செல்லாமல் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் ராஜாராம் சாலை, LIC காலனி மன்னார்புரம் வழியாக செல்லவேண்டும்.
ஏர்போர்ட் மற்றும் புதுக்கோட்டை செல்லும் மற்ற வாகனங்கள் TVS டோல்கேட் வழியாக செல்லாமல் மன்னார்புரம் LIC காலனி, கே.கே.நகர் வழியாக செல்லவேண்டும்.IG office Junction to Race Course நுழைவு வாயில் வரை பொது வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:
உதவி இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments