Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் மூடிய டாஸ்மாக் கடையில் உள்ள ரவுடிகள் பெண் வீட்டை பூட்டி சென்ற சம்பவம் – ரவுடிசம்,அராஜகம் -பெண் கதறல்

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பேருந்து நிலையம் பள்ளி கல்லூரிகள் ஆலயங்கள் உள்ளங்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மார்க் மதுபான கடைகளை மூட கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது அதிரடியாக இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவிட்டார் இதில் திருச்சி 16 கடைகள் மூடப்படுகின்றன. முதலில் மூடப்பட்டுள்ள கடை திருச்சி கலைஞர் அறிவாலயம் எதிரே உள்ள எலைட் ஷாப் டாஸ்மாக் மதுபான கடை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீதமுள்ள கடைகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி ஒவ்வொன்றாக மூடப்படும் என டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி புத்தூர் நான்கு முனை சந்திப்பில் பேருந்து நிறுத்தத்திற்கும் வீடுகளை ஓட்டியும் உள்ள டாஸ்மாக் கடையை மூட தொடர்ந்து பொதுமக்கள் பெண்கள் வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவால் டாஸ்மாக் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அந்த கடையை மூடி சீல் வைத்து சென்றனர். இந்நிலையில் அந்த கடையை மூட வேண்டும் என வயதான பெண் ஒருவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தால் இந்நிலையில் அவருக்கு இரண்டு நாட்களாக மிரட்டல் விடுத்து நீ வாழ முடியாது உயிரோடு இருக்க முடியாது எனத் தொடர்ந்து மிரட்டி அவரது வீட்டை ரவுடிகள் பூட்டி சாவியை எடுத்து சென்றுள்ளனர். அந்த பெண் தனியாக இருப்பதால் தனக்கு

பாதுகாப்பு வேண்டுமென கதறிக் கொண்டிருக்கிறார். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார். ஆட்சி மாறியும் இன்னும் ரவுடிசம் செய்யும் நபர்களின் காட்சிகள் மாறாமல் உள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *