த.வெ.க செய்தது குதிரை பேரம் தான் என்பதை நிரூபிப்போம். அதிமுக எம்.எல்.ஏக்கள், அமமுக சார்பில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சி.பி.ஐ விசாரணை கோருவோம் – டி.டி.வி தினகரன் பேட்டி திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், மாற்றத்தை விரும்பிய மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து ஜன நாயகத்தை காப்பாற்றி உள்ளார்கள்.த.வெ.க ஆட்சி குறித்து மூன்று மாதங்களுக்கு பின் பேசலாம்.அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் சில சலசலப்புகள் நடந்துள்ளது. இதையெல்லாம் கடந்து பாராளுமன்ற தேர்தலிலேயே அதிமுக சாதனை படைக்கும்.

காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. அமைச்சராக வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இதை செய்துள்ளது.கம்யூனிஸ்ட், விசிக இருவரும் அமைச்சர் கேட்கவில்லை அப்படி கேட்டிருந்தால் அவர்கள் மானம் போயிருக்கும்.த.வெ.கவினர் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏவை அபகரித்துள்ளார்கள். அதிமுக வை ஊழல் கட்சி, மற்றும் சில கட்சி என ஏளனமாக விஜய் பேசினார். அந்த விஜையை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பது எப்படி நியாயம் ?நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தொடர்கிறோம்.இன்னொரு தேர்தல் வந்து விடும் உள்ளிட்ட காரணங்களை கூறி த.வெ.கவிற்கு சில கட்சிகள் ஆதரவு அளித்தது தர்மத்திற்கு எதிரானது.

த.வெ.க ஆட்சியின் ஆயுள் காலம் ஊசலாகி கொண்டுள்ளது.அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் எடுத்துள்ள விஜய் ஆதரிக்கும் முடிவு அவர்களையே பாதிக்கும்.அதிமுக எம்.எல்.ஏக்கள், அமமுக சார்பில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சி.பி.ஐ விசாரணை கோருவோம்அரசியல் கட்சியின் தலைவர் தான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்.த.வெ.கவில் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளது.ரீலில் ஆட்சி நடத்த முடியாது. ரியலை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.த.வெ.க அதிமுகவை அழிக்க பார்க்கிறது. இதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.த.வெ.க வை ஆதரிப்பது அறம் என கூறினால் அதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.பதவிக்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவை ஆதரித்தால் வரலாறுஅவர்களைமன்னிக்காது.அதிமுகவை அழிக்க த.வெ.கவின் ஏஜெண்டாக செங்கோட்டையன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்சனையை பார்த்து பா.ஜ.க தலைவர்கள் வருத்தப்படுகிறார்கள்.கட்சி கைவிட்டு போய்விட கூடாது என த.வெ.க வை ஆதரிப்பது அதிமுகவை அழிப்பதற்கு சமம்.அதிமுகவிற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.

மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் கூறும் பொய் அவருக்கு எதிராக தான் திரும்பும். காமராஜ் காரில் அமர்ந்து கையெழுத்து போட்டதை வீடியோ எடுத்தது யார் என்பது எனக்கு தெரியும்.த.வெ.க செய்தது குதிரை பேரம் தான் என்பதை நிரூபிப்போம். குதிரை வேகத்தில் செயல்படுவோம் என கூறும் விஜய் பேரம் பேசி தான் குதிரையை வாங்கி உள்ளார் என்றார்.பேட்டி : டி.டி.வி தினகரன்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments