திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மா உணவகம் மற்றும் இ – சேவை மையத்தில் ஶ்ரீரங்கம் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கொண்ட ஆய்வில் அம்மா உணவகத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.

உணவக வாயிலில் இருந்த விளம்பர பலகை பின்புறம் தொடர்ந்து சிறுநீர் கழிப்பதால் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது.
உணவகத்தின் உள்ளே பல்வேறு குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகும் நிலையில் உள்ளது.
12 பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கான கழிப்பறை பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதால் அவதியில் உள்ளனர்.
உணவக தரை முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததோடு, புகார் அளித்தவர்களை அதிகாரிகள் சிலர் இழிவாக பேசியுள்ளனர்.

முழுமையாக இதனை சரி செய்து 1 வார காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகர ஆணையருக்கு வலியுறுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments