திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ என்று பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அந்த வகையில் திருச்சி மேரிஸ் மேம்பாலம் மற்றும் அரிஸ்டோ மேம்பாலம், பஞ்சப்பூர் உயர்மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு அந்த பணிகள் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பணிகள் முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்தும், பணிகளை விரைவாக முடிப்பதற்கு அதிகாரியுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

திருச்சி மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இருந்த மாரிஸ் மேம்பாலம் மற்றும் அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் விவரம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டு அறிந்துள்ளேன். பணிகள் எந்த நிலைமையில் உள்ளது என்பது குறித்து விரிவான தகவலை விரைவில் தெரிவிப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments