Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் SDTU மாநில பொதுக்குழு – ஹசன் பாபு தலைவராக தேர்வு; மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம்

எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க அமைப்பாளர் SDTU தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது, பொதுக்குழு நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவராக ஹசன் பாபு தலைமையில் 19 நிர்வாகிகள் அடங்கிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹசன்பாபு கூறுகையில்… மத்திய அரசின் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் நிலையில், 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியமைத்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மத்தியஅரசு பறித்துள்ளதுடன், தொழிற்சங்க உரிமைகளையும் பறித்து கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனவும், இதனை திரும்பப்பெறும் வரை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து எஸ்டிடியு தொடர்ந்து போராடும் என உறுதிபட தெரிவித்தார்.

 

 

 

5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொண்டதுடன், வெளிநாட்டு கொள்கையினால் ஏற்பட்ட தோல்வியை இந்த வெளியேற்றத்திற்கு காரணம் என்றும் இந்த விளையாட்டு திரும்பப்பெறும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டார்.

 

மேலும் ரயில்வேயில் முப்பதாயிரம் பணியிடங்களை பறிக்கக் கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசு கண்டனத்தை தெரிவிப்பதுடன், உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

 

 

 

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் ஆட்டோ தொழிலாளர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர், புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு ஆட்டோ களுக்கான கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் மேலும் ஆட்டோ மற்றும் கால்டாக்ஸி தொழிலாளர்களை நசுக்கும் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

பேட்டி : திரு.ஹசன் பாபு – மாநிலத் தலைவர், குறிப்பு படகாட்சி திருச்சி எப் டி பி தொழிற்சங்கம் குறிப்பு படகாட்சி திருச்சி எப் டி பி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *