திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, தற்காலிக பேருந்து நிலையம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் செயல்பட்டு வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்துக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் சில தினங்களுக்கு முன்பு துணை சபாநாயகர் ரவிசங்கர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவில் பணி முடிக்கவும் தற்காலிகமாக மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், இந்நிலையில், வழக்கம்போல் வெளியூர் செல்ல வந்த பெண் ஒருவர் கடும் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து இத்தகவலை அருகிலுள்ள சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், துணை சபாநாயகர் ரவிசங்கர் அரசு பணிமனையை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த அரசு பேருந்து பணிமனை உதவி இளநிலையாளரை தொடர்பு கொண்டபோது தொலைபேசி அழைப்பை ஏற்காததால், ரவிசங்கர் நேரடியாக நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு பணிமனை அதிகாரி உதயகுமாரிடம் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பேருந்து இயக்க நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த சம்பவம் துறையூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் எளிதில் சென்று வர புதிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை அரசு ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சட்டமன்ற துணை சபாநாயகர் பேருந்து நிலையத்திற்கு சென்று மக்களிடையே குறைகள் கேட்டறிந்து அதிகாரிகளிடம் நிறைவேற்றக் கூறிய சம்பவம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments