Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் தனியார் பேருந்துகள் திடீர் ஸ்ட்ரைக்

திருச்சியில் இன்று 230-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு உட்பட்ட ஆர்சி பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று கார் மீது மோதிய சம்பவத்தில், அப்பகுதியில் இருந்த சிலர் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதேபோல் நேற்று மாலை திருச்சி கல்யாணி கவரிங் பேருந்து நிறுத்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஹாரன் (Horn) அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள், பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நடத்துநருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாரத்தில் மட்டும் திருச்சி மாநகரில் மூன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்களில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள்தாக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து அரங்கேறி வரும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரைத் தாக்கிய நபர்கள் மீது காவல்துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருச்சி மாநகரில் இயங்கும் 230 தனியார் பேருந்துகள் தனியார் பேருந்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.இதன் காரணமாக, திருச்சியின் இரு முக்கிய பேருந்து நிலையங்களான சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டிய 230-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

வார இறுதி நாளான இன்று, தனியார் பேருந்துகளின் திடீர் வேலைநிறுத்த அறிவிப்பால் சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது அன்றாடப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் வெளியூர் பயணிகள் எனப் பலரும் பேருந்துகள்இன்றிஅவதிக்குள்ளாகியுள்னர். நிலைமையைச் சமாளிக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், வழக்கமான தனியார் பேருந்து வழித்தடங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த

காவல்துறையினர் தற்போது சத்திரம் பேருந்து நிலையத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஷிப்ட் டைமிங் அதிகரிக்க வேண்டும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பேருந்துகள் இயங்காது என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *