Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகர காவல்துறை பயன்படுத்திய 9 வாகனங்கள் ஜூன் 16 அன்று பொது ஏலத்தில் விற்பனை

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.  திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு முதிராநிலையில் கழிவு (Pre-mature condemnation) செய்யப்பட்ட, Traz Cama Jeep-1, Tata Sumo Grande-1, MM540 Jeep-1, Swaraj Mazda-1, Eicher Vajra-1, Tata Varun-1, Temp Traveller Mortuary Van-1 மற்றும் சாதாரண நிலையில் கழிவு செய்யப்பட்ட Tata Sumo Gold Jeep-1, Tata Sumo Victa-1 என மொத்தம்-09 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

 

வருகின்ற 16.06.2026-ந் தேதி காலை 1000 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புவோர் 11.06.2026 முதல் 15.06.2026 -ம் தேதி வரை காலை 1000 மணி முதல் மாலை 0500 மணி வரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள காவல் வாகனத்தை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான வருகின்ற 16.06.2026-ந் தேதி காலை 0800 மணி முதல் 1000 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூ.5000/- முன் பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன், அதற்குரிய சரக்கு மற்றும் சேவை வரியான GST தொகையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி இ.கா.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *