Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் அதிரடி போராட்டம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூர் பூசாரிபட்டியில் ஆலயங்கள் உள்ளன.

இந்நிலையில் ஆலயத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மார்க் கடையால் தொடர்ந்து அந்த பகுதி மக்கள், பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் கடையை அகற்றிட வேண்டும் என்று ஏற்கனவே அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்ற பின்பு ஆலயங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மார்க் கடைகள் அப்புறப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் வீரப்பூர் பூசாரிபட்டியில் உள்ள டாஸ்மார்க் கடை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் இந்த டாஸ்கடை அகற்றப்படாத நிலையில் அந்தப் பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலையில் வீ.பூசாரிப்பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையை உடனடியாக அகற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் உள்ளிட்ட

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மார்க் கடையை உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு செல்வோம் என்று கூறிய நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை தாசில்தார் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் இல்லை ஆகவே உடனடியாக கடையை கட்டுவதற்குரிய உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் என்று கூறி மக்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் உரிய நடவடிக்கை

எடுப்பதாக தாசில்தார் அளித்த உத்தரவாதத்தை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *