திருச்சி, ஜூன் 3 IT Association Meetup – June Edition நிகழ்ச்சி நேற்று திருச்சியில் உள்ள ProDigit வளாகத்தில் நடைபெற்றது. தொழில்முனைவோர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் Dovyo Technologies Pvt. Ltd. நிறுவனத்தின் Founder & CEO திரு. ராஜா முகமது M. அவர்கள், “Fundraising for Startups: How Investors Think & What Founders Must Know” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீடுகளைப் பெறுவதற்கு தேவையான அணுகுமுறைகள், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் குறித்து அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.தொடர்ந்து, Profrontend Limited – UK நிறுவனத்தின் Co-Founder & Director திரு. அனந்த கணேஷ் அவர்கள், “Working with Foreign Clients: Building Global Opportunities from India” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன்பணியாற்றும்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அவர் விளக்கமளித்தார். மேலும், தரவு பாதுகாப்பு விதிமுறைகள், சர்வதேச வணிக நடைமுறைகள், வலுவான சேவைத் தரம், சரியான வணிகத் திட்டமிடல் மற்றும் உலகளாவிய சந்தைகளில் இந்திய நிறுவனங்கள் தங்களது வாய்ப்புகளை எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது குறித்தும் கருத்துகளை பகிர்ந்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வணிக வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறித்து பயனுள்ள தகவல்கள் வழங்கப்பட்டன. மேலும், தொழில்முனைவோர் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி புதிய தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சி, தொழில்நுட்பத் துறையில் செயல்பட்டு வரும் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு பயனுள்ள அறிவுப் பகிர்வு நிகழ்வாக அமைந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments