திருச்சியில் அமைச்சர் ரமேஷ் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்துத் துறை அலுவலர்களுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் தற்போது பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நல மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பணிகளின் தற்போதைய நிலை, அவற்றை விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து, திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர், மாநகர காவல் ஆணையர் காமினி, காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜி, கதிரவன், விக்னேஷ் மற்றும்
பல்வேறு அரசுத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments