திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு மிளகு பாறை வேடுவர் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துரை வைகோ, புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

குழந்தைகளின் ஆரம்பக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டை கருத்தில் கொண்டு, நவீன வசதிகளுடன் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திறப்பு விழாவில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிய கட்டிடம் மூலம் அப்பகுதி குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் சிறந்த சூழலில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவைகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments