தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் த.வெ.க அரசு பொறுப்பேற்றுதற்கு பின்பு சுமார் 207 பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று உள்ளது. அதிலும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. ஆனால் தமிழக அரசு அந்த குற்றங்களை தடுக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் சட்டங்களை கடுமையாக்கி பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கூறியும் எஸ்.டி

பி.ஐ கட்சி மகளிர் அணி சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாற்றம் மாற்றம் என கூறினார்கள் ஆனால் நடைபெற்றுள்ள மாற்றம் மிக மோசமான மாற்றமாக உள்ளது தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சிங்கப்பெண் படைக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பேட்டி : மெஹராஜ், மாநில செயலாளர் – எஸ்.டி.பி.ஐ

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments