தமிழேநாடு முதல்வர் C.ஜோசப் விஜய் பிறந்தநாளினை முன்னிட்டு பொன்மலை பகுதி தலைமை தவெக சார்பில், vasan eye care மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட செயலாளர் S.K அருள் மற்றும் பொன்மலை பகுதி தலைமை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பொன்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கண்களை இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பொன்மலை பகுதி தலைமை உறுப்பினர்களை வெகுவாக பாராட்டி, இனிமேல் இந்த ஆட்சியில் மக்களுக்கு பயன்படும் நல்ல திட்டங்களையும் நலத்திட்ட உதவிகளையும் செய்ய வேண்டுகோள் வைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments