Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திடக்கழிவு தனியார்மயத்தை கைவிடுக – திருச்சி ஏஐடியுசி மேயருக்கு கோரிக்கை

திருச்சி மாவட்ட ஏஐடியுசி

2, பெரியமிளகுபாறை, திருச்சி – 620 001.

AITUC

தலைவர் பொதுச்செயலாளர் பொருளாளர்

வே. நடராஜா,க. சுரேஷ், எஸ். பாலமுருகன்

82481 19727, 92446 22715,94896 84223

நாள் : 22.06.2026

பெறுநர்:

உயர்திரு வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள்,  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.

 

அன்புடையீர் வணக்கம்.

திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை திருச்சி மாநகராட்சி மற்றும் 12 மாநகராட்சிகளில் PPP (Public Private Partnership)முறையில்செயல்படுத்துவதற்கன

திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்தை நியமிக்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப்பணிகள் என்பது இலாப நோக்கமற்ற அத்தியாவசிய பொதுச் சேவையாகும்.  நகரங்களின் சுகாதாரம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய இப்பணிகளை தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கு உட்படுத்துவது பொது நலனுக்கும் தொழிலாளர் நலனுக்கும் எதிரானதாகும்.

பொதுச்சேவைகளை வலுப்படுத்தவேண்டிய தமிழ்நாடு அரசு அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பாதையில் செல்வது தனது சமூகப் பொறுப்பிலிருந்து விலகுவதாகும். எனவே திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை PPP முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.  அதேநேரத்தில் தற்போது ஒப்பந்தம், அவுட்சோர்சிங், தினக்கூலி, சுய உதவிக்குழு அல்லது வேறு எந்த பெயரில் பணியாற்றி வந்தாலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தர சட்டத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், தற்போதைய விலைவாசி மற்றும் குடும்ப வாழ்வாதாரச் செலவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக புதிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

தூய்மை பணியை தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு அரசு கைவிட்டு, அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், பணி நிரந்தரம், வாழ்வாதார உத்தியம், சமூக பாதுகாப்பு, பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஏஐடியுசி சார்பில் வலியுறுத்துகிறோம்.

இப்படிக்கு

[கையொப்பம்]

க. சுரேஷ்குமார்

மாமன்ற உறுப்பினர்

23 வது வார்டு,

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *