வி பிஜி ராம்ஜி திட்ட பெயரை தேசத்தந்தை பெயராக மீண்டும் மாற்ற வேண்டும் வேலை வாய்ப்பு நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். வருடம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் ஊரக பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்,

தேசத்தந்தை காந்தியின் பெயரை கொண்ட இந்த திட்டத்திற்கு விபிஜி ராம்ஜி திட்டம் என பெயர் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் மீண்டும் தேசத் தந்தை பெயர் நிறுவ வேண்டும், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினசரி உதயமாக ரூபாய் 700 வழங்க வேண்டும், தேசிய அலைபேசி கண்காணிப்பு திட்டத்தை கைவிட வேண்டும், கேஒய்சி பயோமெட்ரிக் பதிவு போன்ற உயர் தொழில் நுட்ப பதிவுகள் எடுத்து செய்ய வேண்டும், கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில

உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும், வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளில் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது மருத்துவ செலவை அரசியல் இருக்க வேண்டும் மேலும் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க மாநிலத் துணைத் தலைவர் பத்மாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அச்சங்கம் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments