திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கும் குறிப்பாக துபாய் மலேசியா சிங்கப்பூர் நாடுகளுக்கு அதிக விமானங்கள் இயக்கப்படுகிறது இந்த நிலையில் இன்று காலை 4.30 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் வந்த பயணிகள் இம்மிக்ரியேஷன் சோதனை செய்யப்பட்ட பின்பு விமான நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர் அப்போது

காரைக்குடியைச் சேர்ந்த வில்லியம் என்பவரது மகன் சந்தியாகு ஆரோக்கியம் (42) இவர் காரைக்குடி பகுதியில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார் . இவர் விமான நிலைய முனைய பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்றபோது அங்கு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிய வருகிறது இதனைத் தொடர்ந்து உடனடியாக விமான நிலைய மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் இருந்தும் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று

அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments