Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை

தலைப்பு சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் (International Day Against Drug Abuse and Illicit Trafficking) – தொடர்பாக

இன்று (26.06.2026) சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 KM ஓட்டம் கொள்ளிடம் ரவுண்டானாவிலிருந்து வாளாடி வரை நடைபெற்றது. இந்த ஓட்டம் நடைபெறுவதற்கு முன்பு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் V. பாலகிருஷ்ணன், இ.கா.ப.,உறுதிமொழியை வாசிக்க ஓட்டத்தில் கலந்துகொள்ள இருந்த காவல் துறையினர் (100), ஊர்க்காவல் படையினர் (230) மற்றும் SRM கல்லூரி மாணவ மாணவியர்கள் (400) ஆக மொத்தம் (730) மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டோங்க்ரே பிரவீன் உமேஷ், இ.கா.ப.,மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் & உதவி ஆய்வாளர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

2) இந்த 5 KM ஓட்டத்தை மத்திய மண்டல காவல்துறை தலைவர் *திரு. V. பாலகிருஷ்ணன், இ.கா.ப.,* கொடி அசைத்து துவங்கி வைத்து, மேற்கண்ட விழிப்புணர்வு ஓட்டத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டோங்க்ரே பிரவீன் உமேஷ், இ.கா.ப.,அவர்களுடன் கலந்து கொண்டு மேற்கண்ட ஓட்டத்தை ஓடி நிறைவு செய்தார்கள்.

3) மேலும், ஓட்டம் நிறைவு பகுதியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் கலந்து கொண்ட அனைத்து காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் SRM கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

 

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *