Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தொட்டியத்தில் ரூ.25 கோடி ஜீவனாம்சம் கேட்டு மனைவி ரகளை

தொட்டியத்தில் பரபரப்பு: கணவரிடம் ரூ. 25,கோடி ஜீவனாம்சம் கேட்டு டிபார்ட்மெண்டல் கடை முன்பு மனைவி அவதூறு!கல்லா பெட்டி பணத்தை திருடிச் சென்றதாக கணவர் போலீசில் புகார் – வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பிரபு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்’ நடத்தி வருபவர் பிரபு (39)இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் நித்யா (என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர்.

​இந்நிலையில், பிரபு தனது கடையில் வேலை பார்க்கும் பெண்ணுடன் சிரித்துப் பேசியதை நித்யா தவறாகப் புரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நித்யா நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், தனக்கு ரூ. 25,கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்ததாகத் தெரிகிறது. கடந்த ஓராண்டாக திருப்பூரில் வசித்து வந்த நித்யா, திடீரென தனது 3 குழந்தைகளுடன் தொட்டியத்திற்கு வந்துள்ளார்.

தொட்டியம் வந்த நித்யா, தனது கணவரின் பெயரைத் திட்டமிட்டே கெடுக்க வேண்டும் மற்றும் அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, டிபார்ட்மெண்டல் கடை முன்பு கையில் விளக்குமாற்றுடன் அமர்ந்து அநாகரிகமான முறையில் அவதூறாக ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கு கணவர் மற்றும் கடையில் இருந்தவர்களை மிகக் கேவலமாகத் திட்டித் தீர்த்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கணவரிடம் மீண்டும் ரூ. 25,கோடி பணத்தைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பிரபு, “நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, கோர்ட் தீர்ப்புப்படி பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, தனது கணவர் தன்னை நிர்வாணமாக அடித்ததாக நித்யா போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். பின்னர், முசிறி அரசு மருத்துவமனையில் தஞ்சமடைந்த அவர், கணவர் அடித்ததால் நெஞ்சுவலி மற்றும் காயம் ஏற்பட்டதாகக் கூறி உள்நோயாளியாக

அனுமதிக்கப்பட்டார்

அரசு மருத்துவமனையில் படுத்துக் கொண்டே, சில தனியார் யூடியூப் சேனல்களை வரவழைத்து, “என் கணவர் என்னை நிர்வாணமாக அடித்து சித்திரவதை செய்தார், ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை” எனப் பொய்யான புகார்களைப் பேட்டியாக அளித்துள்ளார். பணத்தைப் பறிக்கும் நோக்கிலேயே அவர் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நித்யா, நேராக பிரபுவின் டிபார்ட்மெண்டல் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு, கடையின் கல்லாப் பெட்டியைத் திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.இது குறித்து பிரபு கூறுகையில், “அவர் என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். நான் பொறுமையாக இருக்கும்படி சொல்லியும் கேட்காமல், எனது பெயருக்கும், நிறுவனத்திற்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் யூடியூப் சேனல்களுக்குப் பொய்யான பேட்டி அளித்துள்ளார்” என்றார்.

​இந்தச் சம்பவம் தொடர்பாக இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருவதை அடுத்து, போலீசார் அது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொட்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *