திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான திருத்தலையூர் ஊராட்சி திருத்தலையூர் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், அப்பகுதிகளில் குடிநீர் உப்பு தண்ணீராக வருவதாகவும், கழிவு நீர் வாய்க்கால் நீண்ட காலமாக தூர் வாராமல் உள்ளது, திருத்தலையூர் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமலும், பல இடங்களில் மனு கொடுத்தும் எந்தவிதமான

நடவடிக்கையும் இல்லை என்று சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையின் காரணமாக வீடுகளில் மழைநீருடன் கழிவு நீர் புகுந்ததால்
அப்பகுதி சமூக ஆர்வலர் அன்பரசன் மற்றும் அப்பகுதி மக்கள் முசிறி முதல் துறையூர் செல்லும் சாலையில் திருத்தலையூர் பகுதியில் பொதுமக்கள் கழிவுநீர் வெளியே செல்ல ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சாலை மறியல் நடைபெற்றது,

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வர்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி அன்றைய தினம் சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
உடனடியாக முசிறி வட்டாட்சியர் லோகநாதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வெளியே செல்லும் அளவிற்கு கால்வாய் பறிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது,

சாலை மறியல் செய்ததால் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வெளியே செல்லும் அளவிற்கு கால்வாய்பணிகள் மேற்கொண்ட முசிறி வட்டாட்சியர் லோகநாதனுக்கு சமூக ஆர்வலர் அன்பரசன் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments