Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் – கொள்ளிடம் புனிதநீர் ஊர்வலம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் – வட காவிரி கொள்ளிடம் ஆற்றில்இருந்து தங்க குடத்தில் புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது – வழி நெடுங்கிலும் பக்தர்கள் நின்று வணங்கி வழிபட்டனர்.திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் ஆனிதிருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் பெருமாளுக்கு நடத்தப்படும்.மிகவும் விஷேசமான ஜேஷ்டாபிஷேகத்தின்போது இன்றுகாலை தங்ககுடம் மற்றும் வெள்ளி குடங்களில் வடகாவிரி கொள்ளிடம் ஆற்றில் இருந்து திருமஞ்சனம் எனப்படும் புனிதநீர் எடுக்கப்பட்டது.

அதன்பின்னர் தங்கக்குடமானது கோவில் யானை ஆண்டாள்மீது வைக்கப்பட்டது. வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீர் கோவில் அர்ச்சகர்களால் சுமந்துவரப்பட்டது. இந்த ஊர்வலமானது நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க ரங்கா ரங்கா கோபுரம் வழியாக கோவிலுக்கு வந்தடைந்தது.அப்போது பக்தர்கள் வழி நெடுகிலும் நின்று வணங்கி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கிகளைக் களைந்து திருமஞ்சனம் செய்யப்பட்டு, பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்டு மறுபடியும் அங்கிகள் சாற்றப்பட்டது. இன்று மாலை நம்பெருமாளுக்கு தைலக்காப்பு அலங்காரம் சாற்றப்பட உள்ளது. திருமஞ்சன நிகழ்ச்சியையொட்டி நம்பெருமாள் சன்னதியில் இன்றும் நாளையும் மூலஸ்தான சேவை கிடையாது.

அதேநேரம் தைலக்காப்பு சாற்றப்பட்டிருப்பதால் இன்றுமுதல் 48நாள் நம்பெருமாள்(மூலவர்) திருவடிசேவை கிடையாது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *