துறையூரில் தமிழ்நாடு மலைக்குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் 50 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு எஸ் டி சான்றிதழ் வழங்கினார்கள்..ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு..

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மலைக்குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரன் தலைமை வகித்து பேசும்போது கடந்த 50 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வந்த நிலையில் தற்பொழுது நமது இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,
மலைக்குறவன் இனச்சான்று நமது சங்கத்தின் தீவிர முயற்சியால் போராடி சுமார் 50 மாணவர்களுக்கு பெறப்பட்டுள்ளது, இந்த சான்றிதழை பயன்படுத்தி அனைவரும் பல்வேறு நிலைகளில் முன்னேற்றமடைய உள்ளதாக பெருமையுடன் கூறி

மேலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழக அரசுக்கும் வருவாய்த்துறைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பேசினார்.மேலும் கூட்டத்தில் மழைக்குறவன் பழங்குடியினர் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments