Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் திருமாவளவன் பேட்டி – ஆகஸ்ட் 17 தமிழர் எழுச்சி மாநாடு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியை நியமித்தது முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவு. தன் நம்பிக்கை கூறிய ஒருவருக்கு முதல்வர் அந்த பொறுப்பை வழங்கி உள்ளார் – திருச்சியில் திருமாவளவன் பேட்டி

கும்பகோணம் செல்வதற்காக விசிக தலைவர் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்

ஆகஸ்ட் 17 நாளாக தமிழர் எழுச்சி மாநாட்டை நடைபெற உள்ளது எங்கு நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும்.மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தனியார்

மயத்தைதடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் அதை உடனடியாக முதலமைச்சர் ஏற்று அந்த முயற்சியை கைவிட்டு உள்ளார் தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகளை ஆலோசனைகளையும் பரீசிலித்து நடவடிக்கை எடுக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.ஒவ்வொரு துறை சார்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.வெள்ளை அறிக்கை என்பது கடந்த கால ஆட்சி நிர்வாகத்தில் எவ்வாறு நிதி நிலைமை இருந்தது என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பது தான். அதனை இந்த அரசு வெளிப்படையாக அறிவிப்பது ஜனநாயகத்தின் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதை உணர்ந்து அரசு செயல்படுவதாக நினைக்கிறேன்.

நாங்கள் 35 வருடமாக தமிழ் தேசியம் பற்றி பேசி வருகிறோம். எங்களி. ஐந்து முதன்மை முழக்கங்களில் ஒன்று தமிழ் தேசியம், சாதி ஒழிப்பு, பாட்டாளி மக்கள் விடுதலை, மகளிர் விடுதலை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்னது தான். ஏராளமான தமிழ் தேசிய கருத்தரங்களை மாநாடுகளை நடத்தி உள்ளோம் அடுத்த பாய்ச்சலாகத்தான் தமிழ் தேசிய மாநாடு நடைபெற உள்ளது.தமிழ்நாடு

அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர் முதல்வரின் நம்பிக்கைகுறியவர் அந்த பொறுப்பு ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பல்ல ஆகவே அந்த பொறுப்பை முதலமைச்சர் தனக்கு நம்பிக்கை கூறிய ஒருவருக்கு வழங்கி உள்ளார்.

அது உட்கட்சி விவகாரம் அரசு பதவி இல்லை அதை முடிவெடுக்கும் அதிகாரம் கட்சி தலைவருக்கு உள்ளது.இந்த அரசு பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவோம் என்று அறிவித்து அகற்றினார்கள் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் முற்றாக மது,போதை ஒழிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள ஒரு பிரச்சனை.

எல்லா மாநிலம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் போதை மாத்திரைகள் மது போன்ற அனைத்தும் பெரிய அளவில் புழக்கத்தில் உள்ளது கவலை அளிக்கிறது மதுவிலக்கு என்பது மாநில அரசின் அதிகாரத்தில் இருந்தாலும் கூட தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை எடுக்கப்பட வேண்டும்.காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது அவருடைய கொள்கைகளை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.தேர்தலுக்கு

முன்பாக திமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க பலர் முயற்சி செய்தார்கள் என்னை வைத்தும் அந்த முயற்சி நடந்தது ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை தேர்தலுக்கு பின்பு திமுக கூட்டணியை பாதுகாக்கும் வலிமை எனக்கு கிடையாது.

மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை.மதிமுக வேட்பாளர்களை கட்டாயப்படுத்தி தான் உதயசூரியர் சின்னத்தில் திமுக போட்டியிட வைத்ததாக வைகோ கூறியுள்ளது குறித்து திமுகவிடமும் மதிமுக விடமும் தான் கேட்க வேண்டும்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *