Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பணியின்போது மது போதையில் கிராம நிர்வாக அலுவலர்- வைரலாகும் வீடியோ!

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்திற்குட்பட்ட பாலகிருஷ்ணம்பட்டி கிழக்கு வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக (VAO) சின்னத்தம்பி பணியாற்றி வருகிறார். இவர் பணிநேரத்தில் மது போதையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி. மேட்டூரைச் சேர்ந்த மேரி என்பவர் முதுமை காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது பேரன் சதிஸ் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததால், இறுதிச் சடங்கில் பங்கேற்க பிணையில் வெளியே வர தேவையான ஆவணத்தில் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்து பெற குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

அப்போது, கிராம நிர்வாக அலுவலர் மது போதையில் இருந்ததால் கையெழுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக பேரன் சதிஸ் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் மருதை தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *