திருவெறும்பூர் அருகே உள்ள அரசு மதுபானகிடங்கில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைக்கப்பட்டதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் தமிழ்நாடு வாணிபக் கழகம் இயங்கி வருகிறது இதில் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான மதுபானங்கள் அங்கு இறக்கி வைக்கப்பட்டு பின்னர் மாற்று வாகனத்தில் அங்கிருந்து ஏற்றி எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்

இந்த நிலையில் அங்கு சுமார் 25 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக 90 பேர் வேலை பார்த்து வருவதாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தற்போது வழங்குவதாக கூறப்படுகிறது இதனை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் அப்பொழுது ஒப்பந்த தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் அதை குறைக்க கூடாது எனக் கூறியதோடு ஒப்பந்தக்காரர் அவர்களிடம் பேச மறுப்பதாகவும் அதே போல் தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் மேலாளர் அதியமான் தொழிலாளர்களை சந்திக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நாள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments