திருச்சி பாலக்கரை காஜாபேட்டை அடுத்த கிருஷ்ணர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வகுமார் (23). இவர் இன்று மாலை தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆரோக்கிய செல்வகுமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்கரை காவல்துறையினர், உயிரிழந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ஆரோக்கிய செல்வகுமார் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
காஜாபேட்டை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார்

அளித்துள்ளனர். இருந்தபோதிலும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது இளைஞர் ஒருவர் போதைப்பொருளால் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது தீவிர நடவடிக்கை எடுத்து, போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments