திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 100 கிலோ குட்கா பான் மசாலாவை பறிமுதல் செய்துள்ளனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி பகுதியில் விற்பனைக்காக வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கூலிப் உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடியாக சோதனை செய்த போது விமல் பாக்கு 30 கிலோ ஹான்ஸ் 70 கிலோபதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்ததோடு இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு ( 39 ) அவரது தந்தை ஆறுமுகம் (67) மற்றும் வடிவேல் ( 47 ) ஆகிய மூன்று பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்து மூன்று பேரையும் திருச்சி ஆறாவது குற்றவியால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments