Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி அரியமங்கலத்தில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை சிலிண்டர் முறைகேடு குற்றச்சாட்டு

திருச்சி அரியமங்கலம் தனரத்தினம் நகரில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் விநியோகம் செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், புக்கிங் குளறுபடி உள்ளதாக, வாடிக்கையாளர்கள் ஏஜென்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

டெலிவரி பண்ணாமலே OTP கேட்கிறார்கள் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு..திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே உள்ள தனரத்தினம் நகரில் பாரத் கேஸ் ஏஜென்சி இயங்கி வருகிறது.இந்த ஏஜென்சியில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் புக்கிங் செய்வதில் குளறுபடி நடப்பதாகவும், சிலிண்டர் வினியோகம் செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், OTP கேட்பதாகவும் வாடிக்கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளியில் சிலிண்டர் புக்கிங் செய்தால் காலதாமதமாக விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் சிலருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படாமலே விநியோகம் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்ததாகவும் , தொடர்ந்து வங்கி கணக்கில் அதற்குரிய மானியம் வரவு வைக்கப்படுவதாகும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் சிலருக்கு புக்கிங் செய்தும் மூன்று மாதங்களுக்கு மேல் சிலிண்டர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளதென கூறப்படுகிறது.

நாள்தோறும் தங்களது அன்றாட பணிகளை விட்டு சிலிண்டர் வாங்குவதற்கு வாடிக்கையாளர்களைஅலைகழிக்கப்படுதககூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை ஜோதி என்ற பெயரில் இயங்கி வரும் பாரத் கேஸ் ஏஜென்சிக்கு வந்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உடனடியாக சிலிண்டர் வழங்க வேண்டும் எனவும், சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு நடப்பதை படுக்க வலியுறுத்தியும் கேஸ் ஏஜென்சி யை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அவர்களுக்கு பொதுமக்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் அங்கிருந்தவர்களிடம் நடந்த விபரத்தை கேட்டறிந்தார்.தொடர்ந்து அவர் கேஸ் ஏஜென்சியில் பணிபுரிவரிடம் காலதாமதத்திற்கான காரணம் என்னவென்று கேட்டார்.

அதனால் ஏஜென்சியின் பணியாளர்கள் தங்களுக்கு 35 நாட்களாக சிலிண்டர் சப்ளை இல்லாததால் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.தொடர்ந்து அவர் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களிடம் சட்ட முறைப்படி கேஸ் ஏஜென்சி மீது காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். அதன்பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என வாடிக்கையாளர்களும் தெரிவித்தார்.

செயற்கையான சிலிண்டர் தட்டுப்பாட்டை உருவாக்கி சில கேஸ் ஏஜென்சி நிறுவனம் கள்ளச் சந்தையில் சிலிண்டரை பதுக்கி வைப்பதாகவும், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யப்படாமலே, அந்த சிலிண்டரை வணிகப் பயன்பாட்டிற்கு விற்று வருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட பாரத் கேஸ் நிறுவனம் ஒவ்வொரு ஏஜென்சியும் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பேட்டி… தர்மன்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *