Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கல்குவாரி எதிர்ப்பு கிராமசபை புறக்கணிப்பு

மணப்பாறை அருகே கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்யக்கோரி ஆலம்பட்டி ஊராட்சி கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்.கிராமசபையை நடத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள மருதம்பட்டியில் கல்குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அந்த பகுதியில் 3 குவாரிகள் இயங்கி வரும் நிலையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பி மக்கள் வாழும் நிலையில் குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதுடன் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலையும் கல்குவாரியை சுற்றி உள்ள கிராமங்கள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், உடனடியாக புதிய கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்து கல்குவாரி செயல்பட தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவந்தாம்பட்டி, ஆலம்பட்டி, மருதம்பட்டி, தவசிபட்டி, தெத்தூர், நைநான்பட்டி, உசிலம்பட்டி, நாட்டார்பட்டி, உள்ளிட்ட கிராம மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட

போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று ஆலம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். மேலும் அங்குள்ள கோவில் முன்பு நின்று கல்குவாரிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர் இதனால் பரபரப்பு ஏறபட்டது. அதிகாரிகள்‌ காத்திருந்தும் பொதுமக்கள் பிற்பகல் வரை வராததால் மருங்காபுரி வட்டாட்சியர் பாலகாமாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவநேசன் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தும் சமாதானமடையாத மக்கள் கல்குவாரி அனுமதியை ரத்து செய்யும் வரை கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்போம் என உறுதியாகக் தெரிவித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் கிராமசபைகூட்டம் நடைபெறவில்லை.

பேட்டி :

1. ராஜாராம், ஆலம்பட்டி.

2. சுதா, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். ஆலம்பட்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *