Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

108 ஊழியருக்கு ரூ.55 ஆயிரம் சம்பளமா- அவை குறிப்பை நீக்க கோரிக்கை

திருச்சி108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் மாத சம்பளத்தை தவறாக குறிப்பிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் கருத்தை அவை குரூப்பில் இருந்து நீக்க வேண்டும்.. திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சங்கர் தெரிவித்தது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 55 ஆயிரம் சம்பளம் வழங்குவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் தரவுகளை ஆராய்ந்து சட்டப்பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக கேட்டுக் கொண்டுகொள்கிறோம். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு முன்பாக 108 ஆம்புலன் சேவை தொடங்கப்பட்டது.அதில் ஒரு சில ஊழியர்கள் வேண்டுமென்றால் அமைச்சர் சொன்னது போன்று மாத சம்பளம் பெற்று இருக்கலாம். ஆனால் பலருக்கும் அமைச்சர் சொன்னது போன்று மாத சம்பளம் கிடைக்கவில்லை, சில தினங்களுக்கு முன்பாக 108 ஆம்புலன்ஸ் ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் புதிதாக 108 ஆம்புலன்ஸில் சேர்க்கக்கூடிய தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரூ21,150, மற்றும் ரூ 21,200 வழங்குவதாக கூறி ஆள்சேர்ப்பு நடைபெற்றது. ஆகையால் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் 55 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவது என்ற குறித்த அறிவிப்பை சட்டப்பேரவை தலைவர் அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்கள் சட்டம் அமல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தோல்வி அடைந்துள்ளது.

தொழிலாளர்கள் சட்ட விதியின் படி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு இதுவரை போனஸ் என்பது வழங்கப்படவில்லை, 8 மணி நேரத்துக்கு பதிலாக 12 மணி நேரம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இது குறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் மாநில அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் 12 மணி நேரத்துக்கு பதிலாக பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு பணி சுமையை குறைத்து மாதாந்திரம் வழங்கக்கூடிய தொகையை உயர்த்தி தர வேண்டும். அதேபோன்று போனஸ் வழங்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியும் மாநில அரசு செய்து தரவில்லை. பாதுகாப்பு என்பதே இல்லாமல் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை எழுப்பினர்.

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 1800 நபர்களுக்கு பணி ஆணை வழங்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அரசு பணி கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் ஆகையால் உடனடியாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று மின்சாரத் துறையில் டேபிள் ரீடிங் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் ஒவ்வொரு நாளும் மின்சாரத் துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பணியாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும், மின்சாரத் துறையில் இவர்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக சட்டப்பேரவையில் இது போன்று பேசி வருகிறார்கள். ஆகையால் சட்டப்பேரவை தலைவர் இவர்கள் பேசிய குறிப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில பாரதிய மஸ்தூர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேட்டி – தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் சங்கர்- பாரதிய மஸ்தூர் சங்கம்…

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *