பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா

பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா விருது, பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டது.- அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்
பள்ளி கல்வி துறை சார்பில் சிறப்பாக செயலாற்றும் அரசு பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா விருது, பேராசிரியர் அன்பழகன் விருது மற்றும் கற்றல் அடைவு காண 100 நாள் சவாலில் பங்கேற்று சிறப்பாக பங்களிப்பு செய்த பள்ளிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது.
தலைமை திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மண்டலம் மூன்றின் தலைவர் மு. மதிவாணன்ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,அரசின் திட்டங்களை பள்ளிகள் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை கண்காணித்து அதில் சிறப்பாக செயலாற்றிய நூறு அரசு பள்ளிகளுக்கு அண்ணா தலைமைத்துவவிருது வழங்கப்படுகிறது.
அதே போல கற்றல் கற்பித்தல் செயல்பாடு உள்ளிட்ட வற்றில் சிறப்பாக பங்களித்த 76 பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.கற்றல் அடைவுக்கான நூறு நாள் சவாலில் பங்கேற்று சிறப்பாக பங்களிப்பு செய்த 4552 பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே 4552 பேர் சிறப்பாக பங்களித்த நிலையில் அதன் தொடர்ச்சியாக 12685 தலைமையாசிரியர்கள் சவாலுக்கு நாங்கள் இன்று தயாராக இருக்கிறோம் என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள்.பல ஆய்வுகள் பள்ளி கல்வித்துறையில் செய்கிறார்கள் அது குறித்தெல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம் ஏற்கனவே ஏசன் என்கிற அமைப்பு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது அது குறித்து எல்லாம் நம்ப வேண்டாம் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.
தமிழக அரசு நடத்தும் ஸ்லாஸ் அறிக்கை தான் சரியான ஆய்வறிக்கையாக உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று தலைமை ஆசிரியர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறோம்.ஒவ்வொரு திட்டத்தையும் தமிழக முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்து வருகிறார். தலைமை ஆசிரியர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாகத்தான் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
அறிவியல் சார்ந்த சமுதாயமாக இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்றால் அதை ஆசிரியர்களால் தான் முடியும் என்பதை முதலமைச்சர் உள்ளபூர்வமாக நம்பி வருகிறார்.இருமொழிக் கொள்கையை அண்ணா உயர்த்திப் பிடிக்கவில்லை என்றால் இன்று நாம் நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியை இழந்து இருப்போம். ஏதோ ஒரு மொழிக்கு அடிமைப்பட்டு நாம் உரிமைகளை இழந்த கூட்டமாக இருந்திருப்போம்.
சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வரும் பொழுது அதற்கு அதிகமான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்தவர் அப்போதைய நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன்.
அண்ணா பெயரிலும் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் விருதுகள் வழங்கப்படுகிறது. இது உங்களை கௌரவப்படுத்தும் நிகழ்வு உங்களை கௌரவப்படுத்துவதன் மூலம் நாங்களும் பெருமை அடைந்து கொள்கிறோம் என்றார்.
அடுத்து பேசுகையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,
ஆசிரியர்கள் என்ன கூறுகிறார்களோ அதை மனதில் வைத்து எழுதி தான் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் புத்தகங்களை தொட்டதே கிடையாது.
விவசாயத்தை பார்க்க வேண்டும் என தந்தை அழைத்ததால் கல்லூரி படிப்பை முடிக்காமல் நான் சென்று விட்டேன் ஆனால் பலமுறை கல்லூரி படிப்பு படித்திருந்தால் ஆங்கில அறிவு கிடைத்திருக்கும் என நினைத்திருக்கிறேன் ஆனால் எங்களுக்கு கலைஞர் அதைத் தாண்டியும் பயிற்சி அளித்துள்ளார். அதிகாரிகளோடு எப்படி பேச வேண்டும் மற்றவர்களோடு எப்படி பேச வேண்டும் என எங்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணி இருக்கிறது எங்களுடைய கட்சிக்கு கூடுதலான கூட்டணியாக இருப்பவர்கள் ஆசிரியர்களின் கூட்டணி தான்.
எம்ஜிஆர் காலத்திலேயே நாங்கள் வாக்கு கேட்க செல்லும் பொழுது எங்களை இன்முகத்துடன் பார்த்து வரவேற்பவர்கள் ஆசிரியர்கள் தான்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வாக்கு சதவீதம் இருக்கும் என கூட்டணி கட்சியில் கூறுவார்கள் மறைமுகமாக ஒரு வாக்கு சதவீதம் உள்ளது என்றால் அது ஆசிரியர்களுடைய வாக்கு சதவீதம்.
ஆசிரியர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர் கலைஞர் அவர்களை சீராட்டி பாராட்டி வளர்த்தவர் கலைஞர்.
தமிழ்நாட்டில் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறைக்கு தான் 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். அரசு பள்ளியை வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என அமைச்சர் கூறுவர் அதற்கு ஏற்ப அது நடந்துள்ளது.
ஆரம்பப் பள்ளியில் கற்றுத் தருவது தான் ஒரு மாணவன் எந்த உயரத்திற்கு சென்றாலும் அவருக்கு உதவுகிறது.
தனியார் பள்ளியில் கல்வி பயின்றவர்களை விட அரசு பள்ளியில் கல்வி பயின்ற பலர் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள் என கூறினார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நூறு அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா விருதும் 76 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதும் வழங்கப்பட்டது அதேபோல 452 பள்ளிகளுக்கு கற்றல் அடைவு காண 100 நாள் சவாலில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டதற்கான பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதுமிருந்து அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






