பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து ஊர்களுக்கு செல்லும் பேருந்து வழித்தடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 09.05.2025 அன்று திறந்தவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்பட்ட அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
செய்தியாளர் சந்திப்பின் போது திரு.வே.சரவணன்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்ததாவது: மாவட்ட ஆட்சித்தலைவர்திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து -நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன் விபரம் வருமாறு:
விரைவுபேருந்துகள் / புறநகரப் பேருந்துகள்.
சென்னை/திருப்பதி/வேலூர்/விழுப்புரம்/ காஞ்சிபுரம்/புதுச்சேரி மார்க்கம்
அனைத்து மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழையபால்பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
தஞ்சாவூர்/கும்பகோணம்/வேளாங்கண்ணி/காரைக்கால் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்லவேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
நாமக்கல்/சேலம் /பெங்களுரு மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை. டிவிஎஸ் டோல்கேட், நெ.1 டோல்கேட் வழியாக செல்லவேண்டும். திரும்பச்
புதுக்கோட்டை/அறந்தாங்கி/ராமேஸ்வரம் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்
கரூர்/ஈரோடு/திருப்பூர்/கோயம்புத்தூர் மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சிசாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.
மணப்பாறை/திண்டுக்கல்/பழனி/குமுளி மார்க்கம்
அனைத்து மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் பேருந்துகளும் கருமண்டபம். மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
மதுரை/தூத்துக்குடி/விருதுநகர்/திருநெல்வேலி மார்க்கம்
மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
நகரப் பேருந்துகள்
மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.
ஆம்னிபேருந்துகள்
மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
உள் வருகை மற்றும் வெளிச்செல்கை (Entry and Exit)
அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்திற்கு உள்வரும்போது (Entry) காவல் சோதனை சாவடி எண்.2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும்.
பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் (Exit) அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (U Turn) செல்ல வேண்டும்.
பயணிகளுக்கான வசதிகள்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் 10 கடைகளும், 12 எண்ணிக்கையில் உணவகங்களும், எண்ணிக்கையில் சிற்றுண்டி கடைகளும் (Snacks) செயல்படவுள்ளது.
மேலும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.பயணிகள் மற்றும் அவர்தம் உடைமைகளின் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் 52 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.பயணிகளின் தேவைக்கேற்ப ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பயணிகளுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் 30 Guit நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பேருந்து முனையத்திற்குள் நடந்து செல்ல சிரமப்படும் முதியவர்கள், நோயாளிகள் பயன்பாட்டிற்காக 3 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின் பேரில் (On call) மருத்துவர் குழு (Health Desk) தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






