கஞ்சா மற்றும் பாலியல் வழக்குகளில் இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரத் பெட்ரோல் பங்கின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ராம்ஜிநகர், காந்தி நகரைச் சேர்ந்த குணா( 29) என்பவரை கடந்த 20.06.2025-ம் தேதி கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புத்தனாம்பட்டி, பொன்விழா நகரைச்சேர்ந்த சிவக்குமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி கஞ்சா மற்றும் பாலியல் வழக்குகளில் ஈடுபட்ட சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான குணா மற்றும் சிவக்குமார் ஆகியோர்கள் மீது தடுப்பு
காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 13.07.2025-ஆம் தேதி சிறையில் உள்ளவர்களிடம் சார்வு செய்யப்பட்டது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 62 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






