மீண்டும் மலை போல் குவிந்து வரும் குப்பைகள்-மாநகராட்சியை கண்டித்து குப்பை கிடங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

மீண்டும் மலை போல் குவிந்து வரும் குப்பைகள், குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வரும் மாநகராட்சி கண்டித்து குப்பை கிடங்கை முற்றுகையிட்டு கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம்
திருச்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலத்தில் 45 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் நாள்தோறும் நான் ஒரு டன் அளவிற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டு மலை போல் குவிந்தது
இந்த குப்பை கிடங்கினால் சுற்றுச்சூழல் மாசுபாடு, காற்று மாசு, நீர் மாசு, சுகாதாரப் பிரச்சனைகள், தீ விபத்து என அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.இந்நிலையில் குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் அறிக்கையில் கூட களம் கண்ட வேட்பாளர்கள் குப்பை கிடங்கை அகற்றி அதற்கு பதிலாக பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் திட்ட மூலம் அகற்ற அப்போதைய அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.அந்த குப்பை கிடங்கை முழுவதும் அகற்றுவதற்காக 49 கோடி ரூபாய் பயோ மைனிங் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு இயந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணிகள் தொடங்கி நடைபெற்றது.
தொடர்ந்து பயோ மைனிங் திட்ட மூலம் குப்பைகளை தரம் பிரித்து அகற்றப்பட்டு வந்தன. சுமார் 70% குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் தனியார் ஒப்பந்த நிறுவனமானது தங்களது ஒப்பந்த காலம் முடிந்ததால் குப்பைகளை அகற்றும் பணியை நிறுத்தியது.தற்போது குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டதால், பயோமைனிங் திட்டமானது முடங்கியது.
இதனால் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் மீண்டும் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருவதால் மலை போல் குவிந்து வருகின்றன.இதனால் குப்பை கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.மேலும் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறியக்கூடிய கழிவு நீரானது குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருவதால் துர்நாற்றம் வீசி வருவதுடன் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இந்நிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் ராஜா தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்று அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு வந்து குப்பை கொட்டும் பகுதியில் பொக்லைன் இயந்திரத்தை மறித்து கண்டன மாநகராட்சியை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
குப்பை கிடங்கை அகற்றுவதற்காக செலவிடப்பட்ட 79 கோடி என்னாச்சு என்றும், இந்தப் பணம் முழுமையாகசெலவிடப்பட்டதா? திருச்சி மாநகரில் உள்ள 25 நுண்ணுயிர் செயலாக்க மையங்கள் செயல்படவில்லை, தேர்தலின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






