லஞ்சம் பெறும் பொழுது கையும் களவுமாக பிடிபட்ட நில அளவை உதவி ஆய்வாளர்

Jul 11, 2025 - 20:59
Jul 11, 2025 - 21:04
 0  1.6k
லஞ்சம் பெறும்  பொழுது கையும் களவுமாக பிடிபட்ட நில அளவை உதவி ஆய்வாளர்

திருச்சி மாவட்டம், ஏர்போர்ட், கபரஸ்தான் தெரு, வள்ளுவர் நகரில் வசித்து வரும் பசிர் அகமது மனைவி   ராபியதுல் பஸ்ரியா என்பவர்  அவரது இடத்திற்கு  தனிப்பட்டா வேண்டி திருச்சி கிழக்கு தாலுக்கா அலுவலகத்தில் நிலஅளவை உதவி ஆய்வாளர் தையல்நாயகி என்பவரை கடந்த 10.07.2025ஆம் தேதி திருமதி.ராபியா அவர்கள் சந்தித்தபோது ரூ.13,000/-ம் கையூட்டு கேட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக இன்று 11.07.2025ஆம் தேதி திருமதிராபியா திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன். காவல் ஆய்வாளர்கள் திரு.பிரசன்ன வெங்கடேஷ், திருமதி.சேவியர் ராணி, திரு.பீட்டர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு

 நடவடிக்கையின் போது திருச்சி, கிழக்கு தாலுக்கா அலுவலக நில அளவை சார் ஆய்வாளர் திருமதி.தையல்நாயகி என்பவர் லஞ்சப்பணம் ரூ.13,000/-த்தை திருமதி ராபியாவிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி கிழக்கு தாலுக்கா அலுவலகத்தின் நிலஅளவை பிரிவில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 1