திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 60 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன் நகரில் கடந்த 16.06.2025-ம் தேதி கணேசன் என்பவருக்கும் சுப்பிரமணியன் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் கணேசன் சுப்பிரமணியனியனை கத்தியால் குத்தியதில் சுப்பிரமணியன் இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கணேசன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொணலையில் கடந்த 13.05.2025-ம் தேதி பாத்திமா விக்டோரியா என்பவரிடமிருந்து Oppo A58 Cell Phone-னை சமயபுரம், சோலை நகரை சேர்ந்த ராசய்யா என்பவர் பறித்து சென்றது தொடர்பாக சிறுகனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ராசய்யா சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய காட்டூர் பாரத் பெட்ரோல் பங்கின் பின்புறம் கடந்த 09.06.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த புதிய காட்டூர், சுசிதரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி கொலை, வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான கணேசன்@ கணேஷ், ராசய்யா மற்றும் சசிதரன் ஆகியோர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 10.07.2025-ஆம் தேதி சிறையில் உள்ளவர்கள் மீது சார்வு செய்யப்பட்டது
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 60 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






