திகைப்பை ஏற்படுத்திய திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

அறிஞர் பெருந்தகை பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை கழகத்தின் சார்பில் தீரர்கள் கோட்டம் திருச்சியில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி எப்போதும் இல்லாத வகையில் எழுச்சியுடன் நடத்துவதற்கு திட்டமிடும் திருச்சி மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.50 மணி வரை பெரும் கட்டுக்கோப்புடன் நடைபெற்றது.
அரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றார்கள்.மாநாட்டு வெற்றிக்கும், திருச்சி மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தின் எழுச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகின்ற கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
தீரர்கள் கோட்டம் திருச்சியில் மறுமலர்ச்சி திமுக இதுவரை நடத்திய மாநாடுகளை விஞ்சுகின்ற அளவில் மாநாட்டு ஏற்பாடுகளை திட்டமிட்டு வருகின்ற திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணன் வெல்லமண்டி சோமு அவர்கள் திருச்சி மண்டல மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்போடு செயல்வீரர்கள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார்.புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மாத்தூர் எஸ்.கே.கலியமூர்த்தி, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன் உள்ளிட்ட
முன்னிலை வகித்த திருச்சி மண்டல மாவட்டச் செயலாளர்கள் ஆசை சிவா, தஞ்சை வி.தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் எஸ்.ஜெயசீலன், அரியலூர் இராமநாதன், திருவாரூர் தெற்கு ப.பாலசந்திரன், திருவாரூர் வடக்கு கா.சி.சிவவடிவேல், நாகை வே.ஸ்ரீதரன் மயிலாடுதுறை செ.கொளஞ்சி ஆகியோர் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பெருந்திரளாக கழகத் தோழர்களை அழைத்து வந்து மாநாட்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம் என உரை நிகழ்த்தினார்கள்.மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா மற்றும்,கழக துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன்,
கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன்,கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.இறுதியாக, கழகப் பொதுச்செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் விழா பேருரை நிகழ்த்தினார்.முன்னதாக நான் உரையாற்றும்போது, மாநாட்டின் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இயக்கத்தில் அனைவரும் தோழமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
நிகழ்ச்சியில், வாரணாசி கி.இராஜேந்திரன் , மல்லிகா தயாளன், ஆ.பாஸ்கரசேதுபதி, ரோவர் K.வரதராஜன், புலவர் முருகேசன், பெல் ராஜமாணிக்கம், அ.மைக்கேல்ராஜ், பெரம்பலூர் சே.துரைராஜ், G.துரைசிங்கம், அரங்க நெடுமாறன், வழக்கறிஞர் க.சி.சிற்றரசு, செந்தில் செல்வன், பால சசிக்குமார், ப.த.ஆசைதம்பி, ஜெயபாரதி விஸ்வநாதன், ஸ்டாலின் பீட்டர் பாபு, A.அன்புராஜ், உ.சோமு, வழக்கறிஞர் சுப்பாராஜ், கொடுமுடி சண்முகம் உள்ளிட்ட திருச்சி மண்டல மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






