துறையூர் சர்வேயர் ராஜா லஞ்சம் வாங்கிய போது கைது

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பொண்ணுசங்கம் பட்டியை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர், தனது விவசாய நிலத்திற்கு பட்டா பெற முயற்சி செய்தார். இதற்காக நில அளவையர் ராஜா ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது, பணம் கொடுக்க விருப்பம் இல்லாத முருகேசன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை DSP மணிகண்டனிடம் புகார் அளித்தார், அதிகாரிகள் திட்டமிட்டு, ரசாயனம் தடவிய பணத்தை முருகேசன் மூலம் ராஜாவிடம் கொடுத்த பொழுது
பணத்தை பெற்றுக்கொண்ட தருணத்தில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜாவை கைது செய்தனர், இவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






