அரசு பள்ளி மாணவன் இந்திய அளவிலான கபடி அணியில் தேர்வு

Jul 11, 2025 - 08:53
Jul 11, 2025 - 08:54
 0  855
அரசு பள்ளி மாணவன் இந்திய அளவிலான கபடி அணியில் தேர்வு

திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் 18 வயதிற்கு உட்பட்ட இந்திய அளவிலான அணியில் இடம் பெற்றுள்ளதற்கு ஆசிரியர்களும் சக மாணவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருச்சி சோம்பரசபேட்டை அருகே உள்ள தாயனூரை சேர்ந்தவர் தயாநிதி மாறன் (18) இவர் தாய் தந்தையை இழந்த நிலையில் கல்லணை அருகே உள்ள புதூரில் உள்ள தனது பாட்டி தாத்தா வீட்டில் வளர்ந்து வந்ததாகவும் அப்படி வளர்ந்தவர் அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது மேல்நிலை கல்வியை வகுப்பை முடித்துள்ளார் இந்த நிலையில் அவர் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அளவிலான கபடி அணியில் இடம் கிடைத்துள்ளது

இது பற்றி தகவல் அறிந்த அரசன் குடி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தயாநிதி மாறனை பள்ளிக்கு அழைத்து பொன்னாடை போர்த்திவாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 1