உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்-திருச்சி மாநகர காவல் ஆணையர்

திருச்சி மாநகர காவல்துறை வாகன சோதனையின்போது சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையின்போது சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத மொத்தம் 258 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 15.07.2025 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 11.07.2025-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள மேற்கண்ட வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 15.07.2025 காலை 08.00 மணிமுதல் 10.00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய்.5000/- முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரியாக நான்கு சக்கர வாகனத்திற்கு 18% GST தொகையையும், இருசக்கர வாகனத்திற்கு 12% GST தொகையையும் செலுத்தி ஏலம் எடுத்த வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






