சன் தொலைக்காட்சி நிருபர் மீது கஞ்சா போதையில் நான்கு பேர் கொலைவெறி தாக்குதல்

கரூர் மாவட்டம் குளித்தலையில் அதிகரிக்கும் கஞ்சா போதை விற்பனை குறித்து சன் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிருபர் சிவா மீது கஞ்சா போதையில் நான்கு பேர் கொலைவெறி தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழு கண்டனம்
குளித்தலை பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த செய்தியாளர் சிவாவை வழிமறித்து தாக்கி பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை அபகரித்த நான்கு பேர் கஞ்சா போதையில் அட்டகாசம்.
காயமடைந்த பிரபல செய்தி நிறுவன செய்தியாளர் குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் தமிழக அரசே, கரூர் மாவட்ட நிர்வாகமே, கரூர் மாவட்ட காவல் துறையே குளித்தலை பகுதியில் கஞ்சா புழக்கத்தை உடனடியாக தடுத்து நிறுத்து
தொலைக்காட்சி நிருபரை கஞ்சா போதையில் தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழுவின் சார்பிலும் ஒன்றிய செயலாளர் இரா. முத்துச்செல்வன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






