ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் முப்பெரும் விழா

ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில் 2025-26ம் கல்வியாண்டின் முப்பெரும் விழா ஜூலை 10ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.முதலில், பள்ளி மாணவப் பேரவை தலைமை ஏற்பு விழா விமரிசையாக நடைபெற்றது. – மாணவப் பேரவை தலைமை ஏற்பு விழா, சாரணர் மற்றும் சாரணியர் இயக்க துவக்க விழா மற்றும் பள்ளி இதழ் வெளியீடு
மாணவர் மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டு துறை தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், இலக்கியம், அறிவியல், சுற்றுச் சூழல் மற்றும் கலை அறிவியல் மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பதவியேற்றனர்.
பள்ளி மாணவர் தலைவராக திரவியா, துணை தலைவராக நிதீஷ்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பதவி ஏற்ற மாணவர்கள், தங்கள் கடமைகளை நேர்த்தியாகச் செய்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.
விக்னேஷ் கல்விக் குழும அறங்காவலர் திருமதி சகுந்தலா விருதாசலம் விழாவில் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக தேசிய கல்லூரி இணை தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் திரு. செல்வராஜ் பங்கேற்று,
“மாணவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.அடுத்து, சாரணர் மற்றும் சாரணியர் இயக்க துவக்க விழா நடைபெற்றது.இதில், திருவெறும்பூர் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் சாரணர் இயக்க மாநில உதவி ஆணையர் திரு. மருதநாயகம் தலைமை வகித்து சாரணர் இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர், பள்ளியின் முதல் இணைய இதழான "Young Visionaries" வெளியீட்டு விழா நடைபெற்றது.இதை விக்னேஷ் கல்விக் குழும அறங்காவலர் திருமதி சகுந்தலா விருதாசலம் வெளியிட்டார்.இந்த இதழின் முத்திரை அச்சு பதிப்பு பள்ளியில் வெளியிடப்பட்டது.
முதல்வர் கிருத்திகா விழாவை வரவேற்று பேசினார்.விக்னேஷ் கல்விக் குழும தலைவர் கோபிநாதன், துணை தலைவர் லக்ஷ்மி பிரபா கோபிநாதன், இயக்குநர் த வரதராஜன், ஆலோசகர் மலர்விழி ஆகியோரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.துணை முதல்வர் ஜெயந்தி நன்றியுரை ஆற்றினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






